நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் (Minister sivashankar) தெரிவித்துள்ளார்.
தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது.
சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், இப்பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு இந்த புதிய பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 24ம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என Minister sivashankar தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கத்தின் அதிநவீன கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தடப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து இயக்கப்படுகின்றன.
பின்னர் ஜன. 24-ம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக வரும் ஜன. 30 அன்று முதல் அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் 710 பேருந்துகளின் புறப்பாடுகள் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மேலும், 160 பேருந்துகளின் நடைகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் ஜன. 30 முதல் இயக்கப்பட மாட்டாது.
இதயும் படிங்க : seeman criticized : சேவியர்குமார் கொலை – குற்றவாளிகளே திமுக தான்” – சீமான்
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர் இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்படும்.
https://x.com/ITamilTVNews/status/1751853576522199219?s=20
பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”