ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எல்லாருக்கும் எளிதாக இணைய சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக ஜியோ பாரத் 4ஜி ஃபோனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை வெறும் ரூ.999 மட்டுமே.
விற்பனைக்கு தயாராக உள்ள இந்த பாரத் 4ஜி ஃபோன் விற்பனை குறித்த டீஸர் ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 28 முதல் மக்கள் இந்த பாரத் 4ஜி ஃபோனை ஆர்டர் செய்யலாம் என்றும், சரியாக இரவு 12 மணிக்கு இதன் விற்பனை தொங்கும் என்றும் இந்த டீஸரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபோன் கிளாஸிக் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் கிடைக்கும் எனவும் தெரிகிறது.
இதுகுறித்த முழு விவரங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்..
ஜியோ பாரத் K1 கார்பான் என அழைக்கப்படும் இந்த ஃபோனை, கார்பான் நிறுவனத்தோடு இணைந்து ஜியோ தயாரித்துள்ளது. ஃபோனின் முன் பக்கத்தில் “பாரத்” என்ற பிராண்டின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். பின்புறம் கார்பான் லோகா இருக்கும்.
இந்த போனில் T9 வகை கீபோர்டு, ஃப்ளாஷ் லைட் மற்றும் ஃபோனின் பின்புறத்தில் கேமரா வசதியும் உள்ளது. மேலும், உங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளை ஜியோ சினிமா செயலி மூலம் இந்த போனில் காணலாம்.
உங்களுக்கு பிடித்த பாடல்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களை எளிதாக சேமித்துக் கொள்ளலாம். மேலும், 1.77 இன்ச் டிஸ்ப்ளே வசதி, மைக்ரோ எஸ்டி கார்டை இணைக்கும் வசதியும் இருக்கும். ஃபோனின் பின்பக்க கேமரா 0.3 மெகா பிக்ஸல் வசதியுடன் செவ்வக வடிவத்தில் இருக்கும்.
இதில் உள்ள ஃப்ளாஷ் லைட் பேட்டரி 1,000mAh பவர் கொண்டது. இதில் வாட்ஸப் சேவையை கூட பயன்படுத்தலாம். ரூ.123-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். இந்த திட்டத்தில் உங்களுக்கு அன்லிமிடட் கால் வசதி, 14ஜிபி டேட்டா மற்றும் அனைத்து ஜியோ செயலிகளையும் பயன்படுத்து வசதி ஆகியவை கிடைக்கிறது.
வருடாந்திர திட்டத்திற்கு ரூ.1234 ரீசார்ஜ் செய்ய வேண்டும். தற்போது ஜியோ பாரத் ஃபோன் அமேஸான் ஃபோன்ற ஆன்லைன் தளங்களில் மட்டுமே கிடைக்கும். நேரடி கடைகளில் எப்போது கிடைக்கும் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.