AIADMK Alliance | கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி இம்முறை பாஜகவுடன் கூட்டணி சேரும் என் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தனது கூட்டணியை உறுதி செய்திருப்பது பா.ஜ.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக இறுதிகட்ட பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன அரசியல் கட்சிகள். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில் முஸ்லீம் லீக்., கொ.ம.தே.க, இ.கம்யூ,. மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி., ஆகிய கட்சிகளுடன் தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்னும் இரு தினங்களுக்குள் திமுக தனது கூட்டணியை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார் துரை முருகன்.
இதையும் படிங்க: ” பிரதமரின் தொலைநோக்குத் தலைமை..” ஆளுநர் ரவி புகழாரம்!
அதே போல, அதிமுகவை பொறுத்த வரை, எஸ்.டி.பி.ஐ., புதிய பாரதம் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே தனது கூட்டணியை உறுதி செய்திருந்தது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், அன்பழகன் ஆகியோர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா உள்ளிட்ட பிற கட்சியினரை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பா.ம.க.வுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் இல்லைத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நட்த்தினார் முன்னால் அமைச்சர் வேலுமணி.
சந்திப்புக்குப் பின், டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், “லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணி என்பதில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக உள்ளதாகவும், அ.தி.மு.க., கூட்டணி வலுவான அணியாக அமையும். எங்களின் விருப்பத்தை தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரிடம் தெரிவித்துள்ளோம். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. விரைவில் எந்த தொகுதியில் போட்டி என்பதை ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்வோம்” எனவும் கூறினார் டாக்டர் கிருஷ்ணசாமி. அதே போல, “புதிய தமிழகம் கட்சித் தலைவருடனான பேச்சுவார்த்தை குறித்து பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்போம். இந்தக் கூட்டணி, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்” என்றார் வேலுமணி.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1764952794791116821?s=20
தற்போதைய நிலையில் தேமுதிக, பாமக ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடனும் தங்கள் கூட்டணி பேஸ்சு வார்த்தையை தொடர்ந்து நட்த்தி வரும் நிலையில், இதர சிறிய கட்சிகளுடன் மட்டும் கூட்டணி அமைக்க விரும்பும் அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளில் நேரடியாக அதிமுக போட்டியிட போவவதாகவும், கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க திட்டம் தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.