Almond Resin : அடிக்கிற வெயிலுக்கு பாதாம் பிசின் தூக்கலா போட்டு ஜில்லுனு ஒரு ஜிகிர்தண்டா குடிச்சா தான் சூடு குறையும். அப்டியா.. அப்டி என்னதான் இருக்கு இந்த பாதாம் பிசின்ல.. வாங்க பார்க்கலாம்..
உடம்பு சூடு முதல் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் கோளாறு வரை அனைத்தையும் சரி செய்யும் அருமருந்தான பாதாம் பிசினில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது..
பாதாம் மரத்தில் இருந்து வடியும் பிசினை உலர்த்தி தான் இந்த பாதாம் பிசின் தயாரிக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு பழுப்பு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும் இந்த பாதாம் பிசினில் புரோட்டீன் சத்து காணப்படுகிறது.
அதனால் இது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கவும், ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.
இதையும் படிங்க : கருஞ்சீரகம் : அத்தனை நோய்களுக்கும் ஒரே மருந்து – அதிசய மருத்துவ குணங்கள்!
இந்த பாதாம் பிசினை ஜிகிர்தண்டா, மில்க் ஷேக், சர்பத் போன்ற நிறைய குளிர்பானங்களில் சுவைக்காக பயன்படுத்துகின்றனர்.
பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு இந்த பாதாம் பிசின் சேர்க்கப்பட்ட உணவுகளை கொடுப்பார்கள். ஏனெனில், பெண்களின் உடலில் ஊட்டச்சத்துக்களை பிரசவத்திற்கு பிறகு திரும்பப் பெற பாதம் பிசின் உதவுகிறது. அதே மாதிரி மாதவிடாய் சுழற்சி பழைய நிலைக்கு வரவும் உதவுகிறது.
ஒரு இயற்கையான குளுரூட்டியாக செயல்படுவதால் உடல் வெப்பத்தை குறைத்து, உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, நீர் கடுப்பு போன்றவற்றை வராமல் உடலுக்கு குளிர்ச்சியை கொடுகிறது.
இந்த பாதாம் பிசினை பால் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.
அதுமட்டுமல்லாமல், மனச்சோர்வு, பதட்டம், பலவீனம் போன்ற மன நிலைகளை மாற்றவும் இது உதவுகிறது.
தினமும் குறிப்பிட்ட அளவு பாதாம் பிசினை உணவுடன் சேர்த்து உட்கொண்டு வந்தால் இதிலுள்ள அதிகப்படியான புரதச்சத்து உங்க தசைகளை வலிமைப்படுத்த உதவுகிறது.
எலும்புகள், தசைகள், தசைநார்கள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்த இது உதவுகிறது.
இதில், அதிகப்படியான ஜிங்க் உள்ளதால் ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் அளவை அதிகரிக்க உதவுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்கி, விந்தணுக்கள் குறைப்பாட்டை சரி செய்கிறது.
ஆனால், எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல பாதாம் பிசினை அதிகளவு உட்கொண்டு வந்தால் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது Almond Resin.
இதையும் படிங்க : May 4 Gold Rate : சற்று குறைந்தது தங்கம் விலை!