சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘SK21’ படத்தின் டைட்டில் மற்றும் (AMARAN TEASER) படத்தின் டீசர் வெளியாகி தற்போது செம வைரல் ஆகி வருகிறது .
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் SK21 இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு மாபெரும் இரு அப்டேடுகளை வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் முரட்டு தனமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க ராணுவ படமான உருவாகி உள்ள இந்த படம் ஒரு உண்மை கதை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ( AMARAN TEASER ) படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படம் சிவர்த்திகேயன் இதுவரை நடித்திராத கதையம்சம் கொண்டது.
மேலும் இந்த டீசரில் சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் அனைத்தும் படு மாஸாக இருப்பதாகவும் நிச்சயம் இந்த நம்ப எஸ்.கேவுக்கு வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் சிவாவின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது .
பிரமாண்ட பொருட்செலவில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் நெடு நீண்ட நாட்களாக உருவாக்கப்பட்டு வந்தது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிகர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்தின் கலெக்சனும் தாறுமாறாக இருந்தது .
Also Read : https://itamiltv.com/siren-twitter-review-how-is-the-siren-movie/
இதேபோல் ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள அமரன் படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.
இதோ அமரன் படத்தின் டீசர்…