இந்தியாவின் தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தின் புனித குகை கோவிலுக்கு அருகே மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர் .40 பேர் காணாமல் போயுள்ளனர். அமர்நாத் யாத்திரை இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) ஆகியோர் சனிக்கிழமை அதிகாலை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது ஆறு அணிகள் பங்கேற்கின்றன.
அதில் 9 பேர் பலத்த காயமடைந்தனர்: இந்திய விமானப்படை அதிகாரிகள்
29 பேர் மீட்கப்பட்டுள்ளனர் அவர்களில் 9 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் மேகவெடிப்பு பாதித்த பகுதிகளுக்கு அருகே தொடர்ந்து குப்பைகளை அகற்றுவதும் காணாமல் போனவர்களை தேடுவதும் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
நீல் கிராத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு 9 உடல்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனBSF MI-17 ஹெலிகாப்டர் மூலம் 9 உடல்கள் நீல் கிராத்தில் இருந்து ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக BSF தெரிவித்துள்ளது. மேக வெடிப்புக்கு மத்தியில், ஹெலிகாப்டர் விமானம் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் 16 உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்னும் சுமார் 40 பேர் காணவில்லை என்று தெரிகிறது. நிலச்சரிவு தொடர் மழை காரணமாக 4 NDRF குழுக்கள் 100க்கும் மேற்பட்ட மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, இந்திய ராணுவம், SDRF, CRPF மற்றும் பலர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் NDRF டிஜி அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.