கேரளாவில் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிய சிறுவனை மின்னல் வேகத்தில் சென்று உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவின் திரிச்சூர் அருகே, தனது நண்பனின் தம்பி மாடியில் இருந்து கீழே விழுந்த தகவல் அறிந்ததும், சட்டை கூட அணியாமல் ஆம்புலன்ஸை மின்னல் வேகத்தில் ஓட்டி சிறுவனின் உயிரை காப்பாற்றியுள்ளார் அம்புலன்ஸ் ஓட்டுநரான அஜ்மல்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சம்பவத்தன்று இரவு ஆம்புலன்ஸை கழுவிக் கொண்டு இருந்த போது, என் நண்பனின் தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக எனக்கு போன் வந்தது. சட்டை போடுவதற்கு 2வது மாடியில் உள்ள அறைக்கு செல்ல வேண்டும் என்பதால், அவசரத்தைக் கருதி அப்படியே புறப்பட்டேன் என்கிறார் அஜ்மல்.
9 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றதால் கீழே விழுந்த சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அஜ்மல் தெரிவித்துள்ளார்.