அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார்.
டிரம்ப் எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக சீனாவும் வரிகளை உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் .
Also Read : ICU-வில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – குருகிராமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
ஏவுகணை, மின்சார காருக்கு பயன்படுத்தும் அரிய உலோகங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா நேற்று தடை விதித்ததற்குப் பதிலடியாக, சீன பொருட்கள் மீதான வரியைப் அமெரிக்கா பல மடங்கு உயர்த்தியுள்ளது .
சீனா விதித்த தடையால், அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்ப, பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில் இரு நாடுகளும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என நட்புறவு நாடுகள் அறிவுறுத்தியுள்ளது.