இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவு உலகின் மிக முக்கியமான ஒன்றாக கருதுகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது :
எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து வளமான மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்புகிறோம்.
Also Read : கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்..!!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை உலகின் மிக முக்கியமான ஒன்றாக கருதுவதாக அவர் கூறினார். நவீன காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உட்பட எங்களின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் நாங்கள் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
அடுத்த 90 நாட்களில், இந்தியாவும் அமெரிக்காவும் சில உயர்மட்ட ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அரசு பயணத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஒரு பெரிய எழுச்சியைக் கண்டுள்ளது என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.