அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் POWER-ஐ அமித்ஷாவும் பாஜவினரும் இப்போது உணர்ந்திருக்கிறார்கள் என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 3 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதுமட்டுமின்றி இந்திய அரசியலைப்பு சட்டத்தை உருவாக்கிய மாபெரும் மனிதரை இழிவாக பேசியதாக கூறி அமித்ஷாவுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ரஞ்சித் கூறியதாவது :
பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
Also Read : மனைவியை துண்டு துண்டாக வெட்டி பார்சல் கட்டிய கணவர் கைது..!!
அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் POWER-ஐ இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன்.
பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது… ஜெய் பீம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.