இந்திய கிரிக்கெட் வீரர் Sarfaraz கான்னை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .
இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த (பிப்ரவரி 15) தேதி ராஜ்கோட்டில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் முதன்முறையாக அறிமுகமாகியிருக்கும் சர்பராஸ் கான் தற்போது மிகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறார்.
இந்த போட்டி தொடங்கும் முன் சர்ஃபராஸ் கானை கண்ணீருடன் கட்டியணைத்து இந்திய அணிக்கு அனுப்பிய அவரது தந்தையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார் .
போட்டியின் போது சர்பராஸ் கானின் தந்தை அணிந்திருந்த டி ஷர்ட் வாசகம் மிகவும் புகழ்பெற்றது. கிரிக்கெட் ஜென்டில்மேன்களுக்கான போட்டி மட்டுமேயல்ல; அது அனைவருக்குமானது என்ற வசனம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் சர்ஃபராஸ் கான்னை பாராட்டும் வகையில், அவரது தந்தைக்கு கார் ஒன்றை பரிசாக வழங்க உள்ளதாக மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
நான் கொடுக்கும் இந்த பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது தனது பாக்கியம், கௌரவம் எனவும் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நாட்டுக்கு நல்லது நடக்கும் அல்லது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஈடுபடுபவர்களை பற்றி ஆனந்த் மஹிந்திரா பாராட்டாமல் இருந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : https://itamiltv.com/govt-schemes-tncm-submission-to-the-people/
பாராட்டுவதில் மற்றும் முடிந்து விடாமல் அவர்களின் திறமைக்கேற்ப வேலை வாய்ப்பையும் கார் அல்லது வேறு எதாவது பரிசுகளையும் ஆனந்த் மஹேந்திரா வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது இந்தியா முழுவதும் வைரல் நாயகனாக வளம் வலம் வரும் Sarfaraz கானின் தந்தையை பாராட்டியது மட்டுமில்லாமல் அவருக்கு கார் வழங்குவதாக அறிவித்திருப்பது அனைவரது பாராட்டை பெற்றுள்ளது