நியாயவிலைக் கடைகளில் பலருக்கு கரும்பு, வேட்டி -சேலை வழங்கப்படவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் (Anbumani Angry) டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒவ்வரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது .
இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள கரும்பு, வேட்டி -சேலை வழங்கப்படவில்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
“தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பின் ஓர் அங்கமாக வழங்கப்படும் செங்கரும்புகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ளவற்றை ஒரு கரும்பு ரூ.24 என்ற விலைக்கு விற்பனை செய்து
அந்த தொகையை அரசிடம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நடைமுறை சாத்தியமற்ற, நியாயவிலைக்கடை பணியாளர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக நியாயவிலைக்கடை பணியாளர்கள் கடந்த 10-ஆம் நாள் முதல் ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர்.
அவர்களுக்கு நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டு விட்டது.
இன்று மாலை வரை அவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க வேண்டும். அவர்களின் பலர் வெளியூரைச் சேர்ந்தவர்கள்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு பணியை முடித்து, பொங்கலைக் கொண்டாட அவர்களால் சொந்த ஊருக்கு செல்ல முடியுமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ள நிலையில்,
எஞ்சிய கரும்பை விற்கும் பணியை அவர்கள் தலையில் சுமத்துவது நியாயமற்றது; இது அவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.
Also Read : https://itamiltv.com/special-award-for-pooranam-ammal/
நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணி மக்களுக்கு நுகர்பொருட்களை வழங்குவது தான்.
அவர்களை தெரு வணிகர்களைப் போன்று கரும்புகளை கூவி கூவி விற்பனை செய்யச் சொல்வது அவர்களின் கண்ணியத்தை குறைத்து விடும். இது தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.
எனவே, இது தொடர்பான சுற்றறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Angry) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.