நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளதற்கு காவெட்டி குரு மகள் கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.கவுடன் பா.ம.க கூட்டணி:
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது .இதற்காக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பாஜக – பாமக இடையேயான தொகுதி பங்கீடு இன்று கையெழுத்தானது.
அப்போது இந்த தொகுதி பேச்சுவார்த்தை முடிவு செய்ய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலர் ராமதாஸ் இல்லத்திற்கு இன்று காலை வந்திருந்தனர். உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச்செயலாளர்கள் மற்றும் பாமக நிர்வாகிகள் என ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து ,செய்தியாளர்களை சந்தித்த பாமக கட்சி பொது செயலாளர் வடிவேல் இராவணன் , நாடாளுமன்றத் தேர்தலில் பாமக பாஜக’வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என உறுதிசெய்தார்.அதன்படி பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு பாஜக 19 இடங்களிலும், பாமக 10 தொகுதிகளிலும், தமாகா 3 இடங்களில் களம் காண்கிறது.மேலும்,பாஜக கூட்டணியில் அமமுக 2 இடங்களிலும், ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஒரு தொகுதியில் களம் காண்கிறது.
இதையும் படிங்க: “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!
காவெட்டி குரு மகள் விமர்சனம்:
அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் போய் பாஜகவில் இணைந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? என காவெட்டி குரு மகள் விமர்சித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த காடுவெட்டி குரு மகள் குரு.விருதாம்பிகை, “ராமதாஸ் தன்னுடைய அன்பு மகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும், மகனும் பா.ஜ.கவில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே?. ஏன் வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள்?
இதையும் படிங்க: ElectionUpdate | பொய் செய்தியால் கோபமடைந்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்!
சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக இருக்கும் பா.ஜ.க உடன் பா.ம.க கூட்டணி வைத்துள்ளது சுயநலம் மிக்கது. சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக்காகப் பா.ம.க குரல் கொடுத்து வந்தது.
ஆனால் இப்போது சுயநலத்துடன் இதற்கு எதிராக க இருக்கும் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருக்கிறது பா.ம.க. இந்த முடிவு பல பா.ம.க நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சமூக மக்களுக்கு நலம் செய்யும் கட்சிகளுக்குத் தேர்தலில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து பாமக கூட்டணியைத் தமிழக அரசியல் களத்திலிருந்து அகற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.