சென்னையில் பழங்கால சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 பேர் சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் குடியிருக்கும் சுமதி, பிரகாஷ் தம்பதியின் வீட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்திய சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு போலீசார் அந்த வீட்டில் இருந்து அம்மன் உலோகச் சிலைகளும், ஒரு உடைவாளும் பறிமுதல் செய்தனர்
Also Read : 7 வருடங்களாக ஷூக்களை குறி வைத்து திருடி வந்த வினோத திருடர்கள் கைது..!!
இதையடுத்து சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்த சுமதி, பிரகாஷ், கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து எடுக்கப்பட்டன, இதில் மேலும் யார் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி புலன் விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.