கர்னூல் மாவட்டத்தில் குடும்ப சண்டையில் மனைவியை சமாதானம் செய்ய, Lip Kiss கொடுக்க முயன்ற கணவரின் நாக்கை கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாராசந்த் நாயக்கும், கர்னூல் மாவட்டம் துக்கலி மண்டலத்தைச் சேர்ந்த புஷ்பாவதியும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து 2015ல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனைவியை சமாதானம் செய்ய வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
அப்போது மனைவிக்கு Lip Kiss விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து வலுக்கட்டாயமாக கணவன் தாராசந்த் முத்தம் கொடுக்க முயன்றதால் ஆதிரமடைந்த மனைவி திடீரென கணவனின் நாக்கை கடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தாராசந்த் நாயக் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லபட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக அனந்தபுரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜொன்னகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.