சொமேட்டோ நிறுவனத்தின் விளம்பரத் தூதர் ஒப்பந்தத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் சொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையப் பணியாளர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்றும், குறைந்த பட்சமாவது இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும் என அறிவுரை கூறிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து பங்குச்சந்தையில் சொமேட்டோ நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியது. இதனை அடுத்து உடனடியாக ஆங்கிலத்திலும், தமிழிலும் சொமேட்டோ நிறுவனம். மன்னிப்பு கேட்டு விளக்கமளித்தது. இந்த விளக்கத்தில் மாநில அளவிலான விளம்பரத் தூதராக அனிருத்தை நியமித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சொமேட்டோ நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக நடித்தால், தனக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் ஒப்பந்தத்திலிருந்து அனிருத். விலகுவது குறித்த ஆலோசனையிலும் இறங்கியுள்ளதாக தவல்கள் தெரிவிக்கின்றன.