செல்போனில் கேம் விளையாடியதால் நடந்த விபரீதம்!

mother-killed-her-daughter-by-cell-phone-has-caused-a-stir
mother killed her daughter by cell phone has caused a stir

ஆந்திராவில் எப்போதும் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த மகளை தாய் கொன்ற நிலையில், தாயை அவரது மகனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா நாகாஷ் பகுதியைச் சேர்ந்தவர் குர்ஷிதா என்ற பெண். இவருக்கு ஜமீர் என்ற மகனும், அலிமா என்ற மகளும் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்த குர்ஷிதா, தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குர்ஷிதாவின் மகள் அலிமாவுக்கு செல்போனில் கேம் விளையாடும் பழக்கம் இருந்துள்ளதால் மகளைத் தொடர்ந்து குர்ஷிதா கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் அலிமா கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது
இந்நிலையில் சம்பவத்தன்று அலிமா செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த தாய் குர்ஷிதா, மகளின் கழுத்தைத் துப்பட்டாவால் இறுக்கியுள்ளார்.

mother-killed-her-daughter-by-cell-phone-has-caused-a-stir
mother killed her daughter by cell phone has caused a stir

இதைப் பார்த்துக் கொண்டிருந்து சிறுவன் ஜமீர் இருவரும் விளையாடுகிறார்கள் என நினைத்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் தங்கை அலிமா இறந்ததைப் பார்த்த ஜமீர், ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தாயின் கழுத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் தாய் குர்ஷிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தத்தோடு சிறுவன் ஜமீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts