Actress Trisha | நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு அண்மையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் ,தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் 100 பேர் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்த போது,
நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகவும், அதில் சில எம்எல்ஏக்கள் நடிகை த்ரிஷாவை அழைக்கவேண்டும் என வலியுறுத்தியதாக வெளிப்படையாக பேசியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஏ.வி.ராஜுவின் சர்ச்சை பேச்சுக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Actress Trisha Notice | ”24 மணி நேரத்தில் ஏவி ராஜு..” கெடு வைத்த நடிகை த்ரிஷா!
இவ்விவகாரம் குறித்து நடிகை த்ரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஏ.வி.ராஜூ தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
தான் திரிஷா பெயரை சொல்லவில்லை என்றும், அவரை மாதிரி என குறிப்பிட அப்படி சொன்னதாகவும் விளக்கம் கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது,
சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார் .
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1760973558824722792?s=20
அப்போது அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் எல்.முருகன்,
மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளதாகவும், இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் பாஜகவை மேலும் பலப்படுத்தும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷாவை( Actress Trisha) கடந்த ஆறுமாதமாக சிலர் தவறாகப் பேசி வருவதாகவும் இது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்ட அண்ணாமலை,
சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.