எம்ஜிஆர், ஜெயலலிதா கருணாநிதியை போல நானும் ஒரு தலைவனாக செயல்பட்டு வருக்கிறேன் என்று தெரிவித்ததற்க்கு அண்ணாமலைக்கு பித்து பிடித்துள்ளது என்று அரசியல் விமர்சகர் திருமதி நாச்சியாள்
சுகந்தி தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக நிர்வாகிகளாக இருந்த சிஆர்டி நிர்மல் குமார், கண்ணன் உள்ளிட்டோர் 11 பேர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் .இந்த விவகாரம் தமிழக பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது பற்றி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்ததித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை,
தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை. அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும். தலைவர்கள் முடிவு எடுத்தால் 4 பேர் கோபித்து கொண்டு வெளியே வருவார்கள். நானும் அந்த வரிசையில் தலைவர் தான்.
பா.ஜ.க.வில் மேனேஜராக இல்லை. கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுப்பேன். தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா போல நானும் ஒரு தலைவனாக செயல்பட்டு வருக்கிறேன். வரும் காலத்தில் வேகத்தில் அதிகமாக தான் இருக்கும். குறைய போவதில்லை. திட்டி விட்டு விவசாயம் செய்யாமல் வேறு கட்சிக்கு போய் வாழ்க என கோஷம் தானே போடுகிறீர்கள் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த கருத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூட்டணி கட்சியாக இருந்தால் தோளில் ஏறி மிதிக்க வேண்டியது இல்லை என காட்டமாக பேசி இருந்தார். தமிழ்நாட்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா போல தானும் ஒரு தலைவனாக ஒப்பிட்டு பேசும் அளவிற்கு யாரும் இன்னும் பிறக்கவில்லை.
மேலும் பாஜகவில் உள்ளவர்களுக்கு சகிப்பு தன்மை வேண்டும். பாஜக உறுபினர்களுக்கும் அண்ணாமலைக்கும் வாய் கொழுப்பு அதிகம் என்றும், மத்தியில் ஆளும் திருடன் பேச கூடாது என்று பேசினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் i தமிழ் வலைத்தளத்திற்கு அரசியல் விமர்சகர் திருமதி நாச்சியாள்சுகந்திஅண்மையில் நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்…
அந்த நேர்காணல் வீடியோ பார்க்க: