Homo sex : புதுச்சேரியில் 8 வயது சிறுமி ஆர்த்தி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்,
தருமபுரியில் 10 வயது பள்ளி சிறுவன் ஓரினச்சேர்க்கை (Homo sex) தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த மன்மதன் என்ற நபர் கூலி தொழிலாளியாக உளர். இவரது மனைவி சீதா. இந்த தம்பதிக்கு 10 வயதில் பொன்னரசு என்ற மகன் இருந்துள்ளார்.
சிறுவன் பொன்னரசு அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், கடந்த 12ம் தேதி மதியம் 12 மணி முதல் சிறுவனை காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.
அப்போது அந்த பகுதி மக்கள் சிலர் சிறுவனை அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் அழைத்து சென்றதை பார்த்ததாக கூறியுள்ளனர்.
அதையடுத்து பதறிப்போய் சிறுவனை தேடியுள்ளனர் பெற்றோர். ஆனால், மாலை வரை சிறுவன் கிடைக்காததால் வேதனை அடைந்த பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில், சிறுவனை அழைத்து சென்றதாக கூறிய 12ம் வகுப்பு மாணவன் இளங்கோவிடம் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
அந்த சிசிடிவி பதிவில், முதலில் சிறுவன் பொன்னரசுவை இளங்கோ அழைத்துச் சென்றதும், திரும்பி வரும் போது சிறுவன் இல்லாமல் இளங்கோ மட்டும் தனியாக வந்ததும் பதிவாகி இருந்துள்ளது.
அதன் அடிப்படையில் இளங்கோவிடம் போலீசார் நடத்திய கிடக்குப்பிடி விசாரணையில், சிறுவனை கொலை செய்ததையும், எதற்காக கொலை செய்தார் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார் இளங்கோ.
இளங்கோ கூறியுள்ள அந்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது.. “சிறுவன் பொன்னரசுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார் இளங்கோ. மேலும், அதை சிறுவன் வெளியே கூறினால் தனக்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என பயந்து பொன்னரசுவை அருகில் உள்ள ஊர் தலைவரின் விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு வந்ததாகவும்” திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.
இளங்கோவனின் வாக்குமூலத்த்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இளங்கோ கூறிய கிணற்றுக்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனிடைய தகவலறிந்து கதறி அழுதபடி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கூடியிருந்த பொன்னரசுவின் உறவினர்கள் சிறுவனை கொலை கொடூரனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவனின் உடலை குடும்பத்தினர் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர்.
மேலும், இளங்கோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் முழு நேரமும் கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பதும், கஞ்சா போதையில் சிறுவனை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து இளங்கோ மீது வன்கொடுமை, ஆள் கடத்தல், கொலை வழக்கு என மூன்று பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் போலீசார்.
அதுமட்டுமல்லாமல் கொலை செய்யப்பட்ட சிறுவன் பொன்னரசு சின்னத்திரை பிரபல பாடகர் மூக்குத்தி முருகனின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.