அண்டார்டிகாவில், உள்ள பனிப்பாறைகள் தற்போது வேகமாக உருகி வருவதாகவும் (glaciers flow), முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் அதிக அளவில் பனிப்பாறைகள் உருகி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்து உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புவி வெப்பமயமாதலினால் ஏற்படும் இந்தக் காலநிலை மாற்றத்தின் விளைவாக எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை பேரிடர்களும் அதிகரித்து வருகின்றன.
அண்டார்டிகா கண்டத்தில் கடந்த 2014 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில், 10,000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, முந்தைய கோடை காலங்களைக் விட, 22% பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது (glaciers flow) கடல்நீர் மட்ட உயர்வுக்கு வித்திடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
மேலும், கடந்த 1992 முதல் 2017 வரையிலான காலப் பகுதியில் மட்டும் பனிப்பாறைகள் உருகி வருவதால், 7.6 மில்லி மீட்டர் கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவது விஞ்ஞானிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.