நாட்டின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில்,டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்களுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய அதிகாரப்பூர்வ அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற முயற்சி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில்,நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது குறித்து இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
ஆனால், பாரத் என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும், பாரத குடியரசுத் தலைவர் என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை என தெரிவித்தார்.