அடுத்தாண்டு (ஜனவரி மாதம்) பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் சில நாள்களில் தொடங்கப்பட உள்ளது.
அந்த வகையில் ஜன. 10-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய விரும்புபவா்கள் செப்.12 வியாழக்கிழமையும், ஜன. 11-ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவா்கள் செப். 13-ஆம் தேதியும், ஜன. 12-ஆம் தேதி பயணம் மேற்கொள்ள விரும்புபவா்கள் செப். 14-ஆம் தேதியும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
Also Read : அத்தை வீட்டுக்கு வந்த பள்ளி மாணவி – நிறைமாத கர்பமாக்கிய மாமா போக்சோவில் கைது..!!
பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை திங்கள்கிழமை வருகிறது. அதேசமயம் ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்புவர்கள் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். வழக்கம்போல் பண்டிகைகால ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும்.
ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம். அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.