சமூக வலைதளங்களில் ரீல்ஸ் போடுபவர்கள் ரூ. 15 ஆயிரம் வரை வெல்வதற்கான போட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்..
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உமாங் ஆப் UMANG (Unified Mobile Application for New-Age Governance) அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகின்றன.
இதையொட்டி மத்திய அரசு போட்டி ஒன்றை அறிவித்துள்ளது.. உமாங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ரீல்ஸ் செய்ய வேண்டும். உமாங் ஆப் நன்மைகள், டிஜிட்டல் இந்தியா, மக்களுக்கு உமாங் நன்மைகள், உங்கள் வாழ்க்கையில் உமாங் ஏற்படுத்திய மாற்றங்கள், உமாங் ஆப்பை சூப்பர் ஆப் என்று அழைக்க முடியுமா? போன்ற தலைப்புகளில் ரீல்களை உருவாக்கலாம்
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ. 12 ஆயிரமும், மூன்றாம் இடம் பெறுவோருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அடுத்து 7 பேருக்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். வீடியோ 90 வினாடிகளுக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 8 ஆகும்.
உமாங் செயலி தொடர்பான போஸ்டரையும் போட்டியாளர்கள் உருவாக்கலாம். இந்தப் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால்.. ரூ. 7,500 வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிப்போருக்கு ரூ. 5 ஆயிரம்.. மூன்றாம் இடம் என்றால் ரூ. 3500 வழங்கப்படும். அடுத்து 7 பேருக்கு ரூ. 1500 வழங்கப்படும்.
இதேபோன்று உமாங் ஆப்பிற்கான ஸ்லோகன் எழுதும் போட்டியும் நடக்கிறது. இந்த போட்டி டிசம்பர் 13 வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 7500 வழங்கப்படும். இரண்டாவது இடத்தில் இருந்தால் ரூ. 5 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு ரூ. 3,500 அளிக்கப்படும். மேலும் அடுத்த 7 பேருக்கு ரூ. 1500 வழங்கப்படும். டேக்லைன் 7 வார்த்தைகளில் இருக்க வேண்டும். டேக்லைன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். அதாவது மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஒரு நபர் ரூ. 30 ஆயிரம் வரை வெல்ல வாய்ப்புள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் https://www.mygov.in/home/do/ என்ற தளத்திற்கு சென்று போட்டியில் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.