Annamalai attacked DMK : திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான், எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள்.
இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,
“கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின்,
இதையும் படிங்க : செந்தில் பாலாஜி இடத்தை நிரப்பப் போவது யார்…? – அதிரடி முடிவெடுத்த திமுக!
அதே தேர்தல் வாக்குறுதிகளை, அப்படியே மறுபடியும் வருகின்ற மக்களவை தேர்தலுக்கும் கொடுத்திருப்பதிலிருந்தே,
எந்தத் தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது தெரிகிறது.
திமுக தனது 2021 தேர்தல் வாக்குறுதிகளில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று பொய் கூறி ஏமாற்றிவிட்டு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்தும்,
அது குறித்து எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு, தற்போது மக்களவை தேர்தலுக்கும் அதே பொய் வாக்குறுதியைக் கொடுக்க வெட்கமாக இல்லையா?
இதுபோக, 100 நாள் வேலைத் திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும் என்ற 2021 தேர்தல் வாக்குறுதியையும் அப்படியே மீண்டும் இந்த தேர்தலுக்கும் கொடுத்திருக்கிறது திமுக Annamalai attacked DMK .
பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்ற நிலையில், திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள்.
இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்: மு.க. ஸ்டாலின்