சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சமீப காலமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினகளுக்கு முன் மாங்காடு அருகே 11 ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அருகே ஆயுதப்படை காவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்ளும் காவலரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்கின்றனர். காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்க வாரத்திற்கு ஒரு முறை கட்டாய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் ஆயுதப்படை காவலர் சாதிக் பாஷா என்பவர் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாதிக் பாட்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 வயதான இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்துள்ள இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. .