பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் .
இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குமிக்க மனிதராக வலம் வந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி தான் புதிதாக கட்டிவந்த வீட்டை பார்க்க சென்ற போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
சென்னையில் உலுக்கிய இந்த படுகொலை சம்பத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read : தருமபுரி மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
இந்நிலையில் இந்த கொலை சம்பத்தில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என ஒருபக்கம் கண்டன குரல்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.