ஆருத்ரா மோசடி பேச்சு அதிகரித்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் உள்ளதால் காவல் துறை பல கோணத்தில் புலன் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை கூறியதாவது :
காவல் துறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள அருண் மற்றும் டேவிட் – க்கு வாழ்த்துக்கள்.இனி வரும் காலங்களில் அரசுக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் இப்ப எனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அனைத்து விமான நிலையங்களின் கூரைகள் விழுகின்றன. கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருக்கிறது.தேர்தல் பத்திர முறை பணம் தான் என காரணம் சொல்கிறார்கள். தேர்தல் நன்கொடை பத்திரமாக பணத்தை எங்களிடம் வாங்கிக் கொண்ட பின் உங்கள் எப்படி தரமான கட்டிடத்தை தர முடியும் என்ற கேள்வியை ஆங்காங்கே எழுதுகிறது
Also Read : கழுத்தை நெரித்த கடன் – வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட தாய், மகன்..!!
பாஜக ஊழல்,உரிமையாளர்கள் பாஜக பக்கம் உள்ளார்கள்,கடத்தல் என ஏமாற்றுபவர்களை தான் ஆதரிக்கிறது. குறிப்பாக பங்கு சந்தை மோசடி,நிதி நிறுவன மோசடி,தங்கம் கடத்தல் என சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் தான் உள்ளனர்
குற்றவாளிகளை அரவனைப்பது,காப்பாற்றுவது தான் பாஜகவின் சித்தாந்த்தமாக உள்ளது.குற்றவாளிகளை இன்னும் மக்களிடம் கொள்ளையடியுங்கள் நாங்கள் காப்பற்றுகிறோம் என்பதை காட்டுகிறது.பாஜகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தாதா -க்கள் தான்.
நீதி,நியாயம்,மக்கள் பிரச்சனை பற்றி பேசினால் அவர்களை அடக்குவது.முதல் தகவல அறிக்கை பதிவு செய்தும் பாஜகவின் பொறுப்பில் இணைகிறார்கள் பதவியேற்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்கள்.தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக உள்ளது.தமிழ்நாட்டை ஒரு போதும் விட்டு கொடுக்க முடியாது
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை பல கோணங்களில் காவல்துறை புலன் விசாரணை நடத்த வேண்டும்.ஆருத்ரா மோசடி பேச்சு கடந்த வாரம் முதல் அதிகரித்து உள்ளதால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம் அரங்கேறி உள்ளதால் காங்கிரசுக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்