தமிழ் சினிமவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். நல்ல பல கதைகளை ஆரம்பம் முதல் தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருமாறி வருகிறார் .
தனது அழாகான பேச்சாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் . இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக இணையத்தில் பல செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது சத்தமின்றி அவர்கள் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்துள்ளது .
இயற்கை அழகு கூடியுள்ள இடத்தில மிகவும் எளிமையாக இரு வீட்டார் முன்னிலையில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.
இதையடுத்து புதுமண தம்பதிகளாக மாறிருக்கும் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகியோருக்கு ரசிகர்கள் , திரை பிரபலனங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையிக் இவர்களின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..