சென்னை எழுப்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இன்று 3 முக்கிய லீக் போட்டிகள் நடைபெற உள்ளது .
நடப்பாண்டுக்கான ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கிய வரும் 12 ஆம் தேதி வரை அனல் பறக்க நடைபெற உள்ளது . ஹாக்கி இந்தியாவுடன் கைகோர்த்து தமிழ்நாடு அரசு நடத்தகும் இந்தப் போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ள .
இந்தியாவின் பெருமை மிகு தேசிய விளையாட்டாக பார்க்கப்படும் ஹாக்கி விளையாட்டின் இப்புகழ்பெற்ற ஆசிய கோப்பை தொடர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் முதல் நாளான நேற்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் ஜப்பான் அணி கொரியா அணியை எதிர்கொண்டது .
மாலை 6:15 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் மலேசியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது அதேபோல் இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய அணி சீன அணியை எதிர்கொண்டது .
இதில் உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்துடன் முதல் போட்டியை விளையாடிய இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை கெத்தாக வீழ்த்தி அட்டகாசமான வெற்றியுடன் முதல் போட்டியை தொடங்கியுள்ளது .
இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி கொரியா அணியை எதிர்கொள்கிறது . மாலை 6:15 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் மலேசியா அணி சீனா அணியை எதிர்கொள்கிறது . அதேபோல் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியுடன் மல்லுக்கட்ட உள்ளது .
இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இன்று நடைபெற இருக்கும் இந்த 3 லீக் போட்டிகளில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.