நாட்டின் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் இடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது .இது குறித்து பாக்கிஸ்தானில் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி ஒன்று வெளியிட்டு உள்ளது.
அதில் கராச்சியில் கோரங்கி பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீ மாறி மாதா கோவிலில் உள்ள தெய்வ சிலைகளைத் தாக்கி உள்ளனர் . இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபகாலமாகப் பாகிஸ்தானில் இந்து கோவிலைக் குறிவைத்து மர்ம கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த சிறப்புமிக்க கோயிலின் சிலைகளைச் சேதம் செய்து உள்ளனர்.
மேலும் அந்நாட்டில் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .