கடந்த சில தினங்களாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலிஸ்தான் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது.அமெரிக்காவிற்கான இந்திய தூதராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்துவாராவிற்குச் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அவரை தடுத்து நிறுத்தி தாக்க முற்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“தரஞ்சித் சிங் சந்துவின் தந்தை சுதந்திரத்துக்கு முன் குருத்துவாராவுக்காக சாபி வாலா மோர்ச்சாவுக்காகப் போராடியவர். அவரை இப்படிக் கேவலப்படுத்துவது நியாயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காலிஸ்தான பிரிவினைவாதிகளின் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் குழு தீவைத்து தாக்குதல் நடத்தியது.
கடந்த செப்டம்பர் மாதம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள குருத்துவாராவிற்குள் நுழைய இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி அனுமதி மறுக்கப்பட்டார். என்று குறிப்பிட்டுள்ளார்.