ரமலான் பண்டிகையை முன்னிட்டு தற்போது 1 மாத கால நோன்பு நடைபெற்று வரும் நிலையில் (prayer) குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் தொழுகையில் இருந்த மாணவர்கள் மீது கோர தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழக விடுதிக்குள் தொழுகையில் இருந்த ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் மீது மர்ம கும்பல் கொடூர தாக்குதல் நடத்தி உள்ளது.
திடீரென விடுதிக்குள் வேகமாக வந்த அந்த மர்ம கும்பல் விடுதி காவலரை தாக்கிவிட்டு தொழிகையில் இருந்த மாணவர்கள் மீது கொடூரமாக தாக்கி உள்ளனர் . இதுமட்டுமின்றி அந்த மாணவர்களின் லேப்டாப், வாகனங்கள் உள்ளிட்டவற்றைச் சேதப்படுத்தியுள்ளனர்.
தடி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்த மர்ம கும்பல், விடுதியில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் (prayer) குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்