2022 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியுள்ளது. பிக்சட் டெபாசிட் திட்டங்களின் கால அளவுகள் 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை உள்ள நிலையில், அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 2.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 2.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 2.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 2.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு – 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை : பொதுமக்களுக்கு – 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 ஆண்டு வரை : பொதுமக்களுக்கு – 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
1 ஆண்டு : பொதுமக்களுக்கு – 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
1 ஆண்டு 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு – 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு – 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு – 5.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.