ராமர் கோயில் திறப்பு விழா: அயோத்தியில் ராமர் சிலை இன்று பிரதிஷ்டை வரலாற்று சிறப்பு மிக்க தருணம் இந்திய பாரம்பரியத்தையும்,
கலாச்சாரத்தையும் வளப்படுத்தி, நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும்” என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் திறப்பு விழா:
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்தார்.
கடந்த 16 ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. ராமர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க 8 ஆயிரத்திற்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு நாடு முழுவதும்,பல்வேறு இடங்களில், பொதுமக்கள் பார்ப்பதற்காக எல்இடி திரையில் ஒளிபரப்பட்டது.
தொடர்ந்து,கோவில்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டது.இதனை காண அயோத்தியில் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.
இதையும் படிங்க :http://kanchipuram-”காஞ்சிபுரத்தில் இருந்தபடி..” மகிழ்ந்த நிர்மலா சீதாராமன்!
இந்நிலையில், இந்த விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கோயிலில், ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்ய நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் சமயத்தில்,
அந்த புனிதமான வளாகத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு தனித்துவமான நாகரீகத்தின் பயணம் முழுமையடையும் என்பதை நான் உணர்கிறேன்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749382914251620641?s=20
நமது தேசத்தின் மறுமலர்ச்சியில் ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தைக் காணவிருக்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“குடியரசுத் தலைவர் அவர்களே, உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
இந்த வரலாற்று தருணம் இந்திய பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மேலும் வளப்படுத்தி,
நமது வளர்ச்சிப் பயணத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அலங்கரிக்கப்பட்ட ராமபிரான்:
அயோத்தி(Ayodhya) ராமர் கோயில் கருவறைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்,
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
வண்ண வண்ண மலர்களாலும், கண்களைப் பறிக்கும் விலை உயர்ந்த நகைகளாலும் குழந்தை ராமர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.