Ram Mandir Inauguration-அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி கோயில் திறக்கப்பட உள்ளது.
கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,
இந்து மத தலைவர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
அந்த வகையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அரைகுறையாக கட்டப்பட்டுள்ள கோயிலை அரசியல் லாபத்திற்காக திறக்கப்படுவதாகக் கூறி பல கட்சிகள், அழைப்பை நிராகரித்துள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள க X-பதிவில்..
மதம் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனிப்பட்ட தேர்வு. ஒவ்வொருவரின் மத நம்பிக்கையையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த பிரதிஷ்டை விழாவில் என்ன நடக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் போன்ற அரசியல் சாசனப் பதவிகளை வகிப்பவர்கள் நடத்தும் அரசு விழாவாக இது மாற்றப்பட்டுள்ளது.
இது மக்களின் மத நம்பிக்கையை நேரடியாக அரசியலாக்கும் செயல். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
இந்தச் சூழல் காரணமாக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாதது வருத்தம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்):
மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவின் மூலம் பாஜக வித்தை காட்டி வருகிறது
என மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745692474079846572?s=20
அகிலேஷ் யாதவ்(சமாஜ்வாதி):
ராமர் கோயிலுக்கான அழைப்பிதழை கொடுக்க அவர்கள் தகுதியற்றவர்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்வதைப் பொறுத்த வரையில், கடவுளின் சார்பாக எனக்கு இப்படியொரு அழைப்பிதழை அனுப்ப பாஜக யார்?
கடவுள் என்னை அழைத்தால் மட்டுமே எனது குடும்ப உறுப்பினர்களுடன் கோயிலுக்கு சென்று வழிபடுவேன்” என சமாஜ்வாதி கட்சி தலைவரும்,
உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Ram Mandir Inauguration) ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை புறக்கணிக்கது உள்ளார்.