Ayodhya-அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின.
6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், 7ஆவது நாளான நேற்று நடைபெற்றது.
மிகவும் நல்ல நேரமான 12 மணி 29 நிமிடங்கள் முதல் 12 மணி 30 நிமிடங்களில் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்ட நிலையில்,
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலையை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.
இதையும் படிங்க : http://April : திருப்பதி தரிசனம் – நாளை முன்பதிவு
இதனை தொடர்ந்து பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார்.
அவரைத் தொடர்ந்து, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.
அப்போது ராம பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்,பல மாநில முதலமைச்சர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், சாதுக்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

மேலும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் துவபட்டனர்.பின்னர் அயோத்தி ராமர் கோவில் கருவறை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட போது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் துவபட்டனர்.பின்னர் அயோத்தி ராமர் கோவில் கருவறை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1749714917035499701?s=20
அயோத்தி ராமர் திறப்பு விழாவில் வட்டமிட்ட கருடன்:
இந்நிலையில் அயோத்தி கோயிலை கருடன் சுற்றி வந்துள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கடவுள் விஷ்ணுவின் வாகனம் கருடன் என இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமருக்காக,
அயோத்தியில்( Ayodhya) கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்ற போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் கடவுளின் ஆசிகிடைத்திருக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடவுள் ராமர் அங்குதான் இருக்கிறார் என்பதற்கான அறிகுறி இது என்றும் நம்பப்படுகிறது.
பக்தி மற்றும் ஆன்மிக உணர்வால் வளிமண்டலம் சூழ்ந்துள்ளதால், இது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும்,
கோயிலின் எதிர்காலத்திற்கான நேர்மறையான சகுனமாகவும் இருக்கிறது என கருதப்படுகிறது.