chhattisgarh govt-அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கான இலவச ரயில் பயண திட்டத்துக்கு, சத்தீஸ்கர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை மற்றும் உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக நடவடிக்கை பணிகள் மேற்கொண்டு வருகிறது.
ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் அனுப்பி வருகின்றனர்.
Also Read:https://itamiltv.com/david-warner-makes-grand-entry-via-chopper/
கோயில் ஏற்பாடுகள் மட்டுமின்றி, பல நூறு கோடி ரூபாயில் அயோத்தி முழுவதும் கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
மேலும் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், விமான நிலையம் என அயோத்தி அனைத்து மாற்றத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும்
சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கான இலவச ரயில் பயண திட்டத்துக்கு, சத்தீஸ்கர் அரசு(chhattisgarh govt) ஒப்புதல் அளித்துள்ளது.
Also Read:https://x.com/ITamilTVNews/status/1746034662944727426?s=20
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தரிசிக்க வாரந்தோறும் இலவச ரயில் பயண திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் ரயில் வாயிலாக இலவசமாக அயோத்தி அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இத்திட்டத்தில், 18 முதல் 75 வயது வரையுள்ள, மருத்துவ ரீதியாக உடல் தகுதி பெற்றவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.