துருக்கியில், 128 மணி நேரத்திற்குப் பிறகு 2 மாத குழந்தை உயிருடன் (baby alive) மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரமான காசியான்டெப் பில் கடந்த 6ம் தேதி அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.
7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி சுமார் 34,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இதுவரை துருக்கியில் 29,605 பேரும், சிரியாவில் 4,574 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீட்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு பதியான ஹாட்டி என்ற இடத்தில் நேற்று மீட்புப் படையினர் கட்டிடக் குவியலை அப்புறப்படுத்தி வந்தனர்.
அப்போது, கட்டிடக் குவியலுக்குள் இருந்து அழுகை குரல் கேட்டிருக்கிறது. மீட்பு படையினர் உடனடியாக இடிபாடுகளை வேக வேகமாக அகற்றிய போது, உள்ளே பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை (baby alive) இருந்துள்ளது.
இந்நிலையில், அக்குழந்தையை மீட்ட பாதுகாப்பு படையினர் உடனடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு 2 மாத குழந்தை உயிருடன் இருந்த நிகழ்வானது பலரது நெஞ்சங்களை வியப்பிலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் 1939 க்குப் பிறகு நாட்டின் மிக மோசமானதாக கருதப்படுகிறது.