Bahujan Samaj Party: 2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இண்டியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லியில் என ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி,
மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா, பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
also read :https://itamiltv.com/thiruvalluvar-idol-inaugurated-by-minister-av-velu/
இதுவரை எந்த ஒரு விஷயத்திலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அதே வேளையில், பாஜக தனது ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இன்று (ஜன.15) அறிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இது குறித்து கூறியுள்ளதாவது:-
பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம்களின் ஆதரவுடன், 2007-ல் உ.பி.யில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தோம்,
அதனால்தான் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். எங்களுடைய அனுபவத்தில் கூட்டணிகள் ஒருபோதும் எங்களுக்கு பலன் அளித்ததில்லை.
also read :https://x.com/ITamilTVNews/status/1747230766701179360?s=20
கூட்டணியால் நாங்கள் இழந்ததே அதிகம்.இந்த காரணத்தினால் நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகள் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புகின்றன.
தேர்தல் முடிந்தபிறகு கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம். வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி(Bahujan Samaj Party) தனித்தே போட்டியிடும்.
வாய்ப்பிருந்தால் தேர்தலுக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி மற்ற கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.