சர்ச்சை கேள்விகளுக்கு பெயர் போன நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவலை வெளியிட்டு அனைவர்க்கும் ஷாக் கொடுத்துள்ளார் .
தமிழ் சினிமாவில் 90 கலாட்டத்தில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.காலப்போக்கில் பத்திரிகையாளரான இவர் தற்போது நடிப்பு , பத்திரிகையாளர் என இரு பொறுப்புகளையும் பொறுப்பே இல்லாமல் செய்து வருவதாக பலரும் இவர் மேல் காட்டம் தெரிவித்து வருகின்றனர் .
வேலை கொடுத்து சோறு போட்ட சினிமா துறை சார்ந்த நடிகர் நடிகைகளையே வாய்க்கூசா வார்த்தைகளால் கேட்கக்கூடாது கேள்விகளை கேட்டு சர்ச்சையில் தவறாமல் சிகிச்சை கொண்டிருக்கும் பயில்வான் ரங்கநாதன், இரவின் நிழல் படத்தில் அரைநிர்வாண காட்சியில் நடித்த ரேகா நாயரை மிகவும் மோசமாக விமர்சித்திருந்தார்.
இதையடுத்து ஒருநாள் திருவான்மியூரில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனை நடுவழியில் வழிமறித்த நடிகை ரேகா நாயர் அவரை வாய்க்கு வந்தபடி கோபம்தீர கடுமையாக திட்டினார். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரேகா நாயர் பயில்வான் ரங்கநாதனை தாக்கவும் செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி செம வைரலானது.
இந்நிலையில் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள ‘யோக்கியன்’ படத்தின் ஆடியோ, மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் பொன்னியின் செல்வன் படம் குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த விழாவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது :
யோக்கியன் வெற்றி பெற வாழ்த்துக்கள். சினிமாவை பொறுத்தவரை மற்ற மாநில சினிமாத்துறை நன்றாக இருக்கிறது. தமிழ் சினிமா துறை நன்றாக இல்லை. தயாரிப்பாளர் சங்கங்கள், நடிகர் சங்கம் என எந்த சங்கமும் தயாரிப்பாளர்களுக்கு உதவவில்லை.
ஒரு படம் ஓடினால் அவனே காட்டிக்கொடுக்கிறான். பார்த்திபன் சொல்லித்தான் பொன்னியின் செல்வனுக்கு இன்கம் டேக்ஸ் ரெய்டு வந்தது. படம் ஓடினால் இன்கம்டேக்ஸ் வந்துவிடுகிறது. ஓடாவிட்டால் வட்டிக்காரன் வந்துவிடுகிறான்.
திரையுலகினர் ஒன்று கூடி சென்று சிறுபட்ஜெட் படங்களுக்கு வரிவிலக்கு கொடுங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்டால் நிச்சயம் தருவார்.
இந்த விழாவில் பார்த்திபன் குறித்து அவர் பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒருவேளை அப்படி இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இந்த பக்கம் எந்த ஒரு சர்ச்சை என்றாலும், முதல் ஆளாக சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுக்கும் நடிகர் பார்த்திபன் இந்த விஷயத்திற்கும் தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது