‘வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியது தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமே வணங்கான் .
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்துள்ள இப்படம் நாளை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது .
Also Read : ஸ்டண்ட் மாஸ்டர் கோதண்டராமன் காலமானார்..!!
இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது . இந்த விழாவில் படக்குழுவை தாண்டி நடிகர் சூர்யா , சிவக்குமார் , சிவகார்த்திகேயன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
இதையடுத்து விழாவில் சிறப்புரையாற்றிய நடிகர் சூர்யா கூறியதாவது :
எனக்கு முதன்முதலாக தம் அடிக்க கத்துக் கொடுத்தது பாலா அண்ணன்தான். நந்தா படத்துல, ஒரு காட்சியில எனக்கு தம் அடிக்கத் தெரியல. எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டேன். அந்த நேரத்துல 300 முறை முயற்சி பண்ணிதான் கத்துக்கிட்டேன். அன்னைக்குக் கத்துக்கிட்டது இன்னைக்கு ரோலக்ஸ் கதாபாத்திரம் வரைக்கும் யூஸ் ஆகியிருக்கு என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.