திருவண்ணாமலை மகா தீபத்தின்போது, தீபம் ஏற்றுவோரைத் தவிர பிறருக்கு மலை மீது ஏற அனுமதியில்லை; மலைப் பாதை மட்டுமின்றி எந்த பகுதியில் இருந்தும் மலை மீது ஏற மக்களுக்கு அனுமதியில்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் கூறியதாவது :
மகா தீப நாளன்றும், அதன் பிறகும், திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழையால் மண் ஈரப்பதத்துடன் இருப்பதாலும், பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருப்பதாகவும், வல்லுநர் குழு எச்சரித்திருப்பதால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read : “என்னப்பா போவோமா” இந்தியர்களுக்கு ‘இ-விசா’ வழங்கும் தாய்லாந்து..!!
மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டும் மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் . மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோருடன், காவல்துறை, தீயணைப்புத்துறையினர், மருத்துவத்துறையினர் செல்வார்கள்.
பாரம்பரிய முறைப்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்படும்.
மலைப்பாதை மட்டுமின்றி, மலையின் எந்த பகுதியில் இருந்தும் மலை மீது யாரும் ஏறக்கூடாது.
மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோரைத் தவிர, மற்றவர்கள் மலை மீது ஏறுவதை தடுக்க வனத்துறை, காவல்துறை கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.