இந்தியாவில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் RBI-யின் கண்காணிப்பின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது.
வாடிக்கையாளர்களின் தகவல்கள், பணம் ஆகியவற்றை பாதுகாக்கவும், வங்கிகள் சார்பில் சிறந்த சேவைகளை வழங்கவும், RBI சில விதிமுறைகளை வகுத்ஜ்த்துள்ளது.
RBI வகுத்த இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அவற்றின் மீது அதிகப்படியான அபராதம் அல்லது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
வங்கி விதிமுறைகளை மீறியதாகச் சமீபத்தில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி RBIயிடம் சிக்கி அதன் விளைவுகளை அனுபவித்தது.
இதையும் படிங்க : April 25 Gold Rate : தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்!
இந்த வரிசையில், தற்போது கோட்டக் மஹிந்திரா வங்கியும் சேர்ந்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் இன்டர்நெட் சேவை பாதுகாப்பு குறித்து RBI கடந்த 2 வருடங்களாக ஆய்வு செய்து வருவதாகவும், அதில் 2022 -2023 க்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளைத் தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க தவறியாகவும் தெரிய வந்துள்ளது.

RBI விதிகளைக் கடைபிடிக்காததால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வாங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதன் படி, கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் வாயிலாகப் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் அந்தச் சேவைகளை உடனடியாக நிறுத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் இந்த வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள், அவர்களின் பணம் மற்றும் சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், RBI யின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நடிகை தமன்னாவுக்கு போலீசார் சம்மன்