இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசின் பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ராணுவத்திற்கு தேவையான இலகு ரக ஹெலிகாப்டர்கள், இலகு ரக போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ராணுவத்திற்கு சென்ற பிரதமர் மோடி தேஜாஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார்.
மேலும் தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்நெகிழ்ச்சி பதிவு பதிவிட்டுள்ளார்.
அதில், “தேஜஸ் விமான பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நமது உள்நாட்டு உற்பத்தி திறன்கள் மீதான எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
மேலும் நமது தேசிய திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.