பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள், 3 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டியில் இங்கிலாந்து அணியும், கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியும் வென்றது. இதனால் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. பின்னர் நடந்த 20ஓவர் தொடரில் பங்களாதேஷ் அணி இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது.
முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் வென்ற பங்களாதேஷ் அணி தொடரை வென்றது. கடைசி போட்டியில் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி அடைவார்கள் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் நேற்று 3வது 20 ஓவர் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி அதிரடியான ஆட்டத்தால் 158 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி மாலன் – பட்லர் பார்ட்னர்ஷிப் மூலம் சுலபமாக 100 ரன்களை கடந்தது.
கடைசி 42 பந்துகளில் 59 ரன்கள் தேவை என்ற நிலையில் தொடர்ந்து விக்கெட்களை சரித்தது பங்களாதேஷ். இறுதி கட்டத்தில் சிறப்பான பந்து வீச்சில் திணற செய்து 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பங்களாதேஷ். தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி இந்த போட்டியில் ஆறுதல் வெற்றி பெறும் என்று நினைத்த இங்கிலாந்து அதிர்ச்சியாக தோல்வியை தழுவியது. இதனால் 3 போட்டிகள் அடங்கிய 20 ஓவர் தொடரை 3-0 என முற்றிலுமாக வென்றது பங்களாதேஷ்.
முதல் முறையாக இங்கிலாந்து அணியை பங்களாதேஷ் 20 ஓவர் போட்டியில் தனது சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், இந்த வெற்றி அணிக்கு மிக முக்கியமானது, அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் பந்து வீச்சில் 4 பேர் மட்டுமே இருந்தது போட்டியின் போக்கை மாற்றுமோ என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் இறுதி ஓவர்களில் பவுலர்கள் நேர்தியாக பந்து வீசியதால் வெற்றி உறுதியாபனது.
இங்கிலாந்து அணி 20 ஓவர், 50 ஓவர் போட்டிகளில் உலகசாம்பியன்கள் எந்த நாட்டில், எந்த மைதானத்தில் போட்டி வைத்தாலும் அவர்களை வெல்வது எளிதான வேலை அல்ல. அவர்களை வென்றது எங்கள் மீதான நம்பிக்கையை மேலும் கூட்டியுள்ளது என்றார்.