பொங்கல் பண்டிகையை (pongal festival) முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை பொங்கல் பண்டிகை. 3 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையை பெரும்பாலான மக்கள் கிராமங்களில் கொண்டாடுவார்கள்.
இதன் காரணமாக பணி நிமிர்ந்தம் காரணமாக வெளி ஊர்களில் தங்கி இருக்கும் பொது மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதையடுத்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வேலைக்காக சென்றவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் இருந்தே செல்லத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை நாளை போகி பொங்கலுடன் தொடங்குகிறது. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை மறுநாள், பொங்கல் பண்டிகை, அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை (pongal festival) முன்னிட்டு இந்த ஆண்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.. அதாவது ஜனவரி 13 ம் தேதி 2 ம் சனிக்கிழமை, ஜனவரி 14, பொது விடுமுறை, ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல்,
இதையும் படியுங்க : https://itamiltv.com/2-17-lakh-people-traveled-by-pongal-special-buses-yesterday/
ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபல் வங்கி சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1746081678479810629?s=20
ஜனவரி மாதத்தில் 16 மட்டும் நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2வது, 4வது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் போன்றவை அனைத்தும் இதில் அடங்கும்.