Barroz : நடிகர் மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம், ‘பரோஸ்’.
இந்த படம் ஃபேன்டஸி கதையம்சம் கொண்டது. இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது – முதல் அமைச்சர் இரங்கல்!
படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த படம் குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார்.
மேலும், 3டி-யில் உருவாகும் இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
![Barroz](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/a-checklist-for-your-skincare-products-1-6.jpg?resize=800%2C401&ssl=1)
கார்டியன் ஆஃப் டி’காமா’ஸ் ட்ரெஷர்’ என்ற நாவலின் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதை தான் இந்தப் படம் என தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் இந்தப் படத்தின் ஒரு பகுதி பின்னணி இசை பணிகள் நடந்துள்ளன.
இதனிடையே, Barroz படம் வருகிற செப்டம்பர் 12-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.