கேடி, கல்லூரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இவர் நடித்த கல்லூரி திரைப்படம் இவருக்கு அடுத்தகட்ட நகர்வுக்கு நல்ல வாய்ப்பாக அமைத்தது. மேலும் அயன், பையா, பாகுபலி, போன்ற பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்துள்ளார்.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ”ஆக்ஷன் ” என்ற தமிழ் சினிமாவில் நடித்து இருந்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறையவே, டோலிவுட் மற்றும் பாலிவுட் பக்கம் திரும்பினார்.
வெப் சீரியஸில் ஆர்வம் காட்டி வந்த தமன்னா இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த தொடர் ரசிகர்களை கவர்ந்ததால் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
இதனை அடுத்து தெலுங்கில் தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள F3விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் திரைப்பட சிரியஸிகளில் இருந்து வரும் தமன்னா அவ்வப்போது போட்டோ ஷூட்டில் ஈடுபட்டுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நீல நிற உடையில் எடுத்த புகைப்படங்கள் தமன்னா வெளியிட்டு இருந்தார். தற்போது அதே உடையில் பாத்ரூமில் அவர் நடத்திய போட்டோஷூட் மற்றும் காரில் எடுத்த வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.