பிக்பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக கலந்துகொண்ட பவா செல்லதுரை தற்போது திடீரென அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 1-ந் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில், அதில், 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேர் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில், முதல் வாரமே வீட்டிற்குள் சண்டைகளும், சர்ச்சைகளும் அனல்பறந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர்கள்.
இந்த வார எவிக்ஷனில் யுகேந்திரன், பிரதீப், ரவீனா, ஐஷூ, அனன்யா, பவா செல்லதுரை மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம்பெற்று இருந்த நிலையில், மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.
அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், பெரும்பாலானோர் பவா செல்லதுரை தான் வெளியேறுவார் என்றும், ஒரு சிலர் பிரதீப் வெளியேறுவார் என கூறிய நிலையில், மக்கள் தீர்ப்பே இறுதியானது எனக்கூறி அனன்யாவை எலிமினேட் செய்தார் கமல்.
இந்த நிலையில், மற்றுமொரு டுவிஸ்ட் ஆக எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த முதற்கட்ட தகவல்படி பவா செல்லதுரை உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சீசனில் பவா செல்லதுரை கூறிய ஒரு சில கதைகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் டஃப் ஆன போட்டியாளராக பவா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.